Monday, March 28, 2011

Jokes

1) வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்.....
"ஹலோ வணக்கம்!"
"வணக்கம்! சொல்லுங்க..."
"வணக்கம்தான் சொல்லிட்டேனே எத்தனை தடவை சொல்றது?"
"அதில்லைங்க"
"எது இல்லை?"
"சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?"
"போன்ல இருந்துதான் பேசறேன்"
"சரி என்ன பாட்டு வேணும்?"
"சினிமா பாட்டுதான்"
"சரி எந்த படத்துல இருந்து?"
"சினிமா படத்துல இருந்துதான்"
"அய்யோ!"
என்று தலையில் அடித்துக்கொண்ட அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்
அன்றோடு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.



2) வயதான பெண்மணி மருத்துவரிடம்:  “டாக்டர், வலது கால் எப்போதும் வலிக்கிறது.

   டாக்டர்:   “வயதாகிவிட்டால் அப்படித்தான் இருக்கும்!

   வயதான பெண்மணி (மீண்டும்) மருத்துவரிடம்: இடது காலுக்கும் அதே வயதுதானே ஆகிறது டாக்டர்!

No comments:

Post a Comment