Wednesday, April 13, 2011

பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்

பேஸ்புக் இணையதளத்தின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பேஸ்புக் பாதுகாப்பு தொடர்பாக அடிக்கடி சிக்கல்கள் வருவதுண்டு.
பேஸ்புக் இணையதளத்தில் தனிக் கட்டுப்பாடுகள் அதிகமாக காணப்பட்டாலும் அவற்றினை நாம் செயற்படுத்தினால் மாத்திரமே அவற்றை அனுபவிக்க முடியும்.
இதற்கு முதலில் பேஸ்புக் இணையதளத்தின் வலது பக்க மேல் மூலையில் காணப்படும் Account என்பதினை க்ளிக் செய்து Privacy Setting என்பதனை தெரிவு செய்து கொள்ளவும். அங்கு முக்கியமான நான்கு விடயங்கள் காணப்படும். அவை
Sharing on Facebook: இந்தப் பகுதி நமது அடிப்படை தகவல்களினை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. நமது பெயர், நண்பர்களின் விபரம், கல்வி நிலையம், வேலை பார்க்கும் இடம், நீங்கள் விரும்பிய பேஸ்புக் பக்கங்கள் போன்ற அடிப்படை விடயங்களினை நமது நண்பர் அல்லாதவர்கள் எவ்வாறு பார்க்கலாம் மற்றும் பயன்படுத்தலாம் என்ற கட்டுப்பாடுகளை மேற்கொள்ள இந்த பகுதி உதவும்.
Connecting on Facebook: இந்தப் பகுதியானது நீங்கள் பேஸ்புக் இணைய தளத்தில் பகிரும் விடயங்களினை யார் யார் பார்க்கலாம் என்பதினை வரையறுக்க இது பயன்படும்.
Apps and Websites: இந்தப் பகுதியானது பேஸ்புக்கில் நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன்களினை கட்டுப்படுத்த உதவி செய்கின்றது. Edit your settings என்பதினை க்ளிக் செய்து நீங்கள் பாவித்துக் கொண்டிருக்கும் அப்ளிகேசன்களினை நிறுத்தவும் அகற்றவும் முடியும். இங்கு சென்று பார்த்தால் நீங்கள் எத்தனை அப்ளிகேசன்களினை பாவிக்கிறீர்கள் என்பதினை பார்க்கலாம்.
Block Lists: இந்தப் பகுதியானது உங்களை தொல்லை செய்யும் பேஸ்புக் நண்பர்களினை தடை செய்ய உதவும். உங்களுக்கு விருப்பமில்லாத நபரின் பெயர்களினை டைப் செய்வதன் மூலம் அவர்களை தடை செய்து கொள்ளலாம். மேலும் அனாவசியமாக அப்ளிகேசன்களில் இணையுமாறு அழைக்கும் நண்பர்களினையும் இங்கு தடை செய்யலாம்.
இது போன்ற அடிப்படை பாதுகாப்பு முறைமைகளை மேற்கொள்வதன் மூலமாக உங்கள் பேஸ்புக் நடவடிக்கைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Monday, April 11, 2011

பென்டிரைவை பாதுகாக்க சில வழிகள்

பென்டிரைவ் என்பது இப்பொழுது கணணி உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருளாகும்.
இதன் மூலம் நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணணியில் பதியவோ உபயோகபடுத்தப்படுகிறது.
இந்த பென்டிரைவ்களில் என்ன பிரச்சினை என்றால், இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணணிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. நம் பென்டிரைவ் பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1. USB WRITE PROTECTOR: இந்த மென்பொருள் உங்களுடைய பென்டிரைவ்களில் உள்ள கோப்புகளை மற்றவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த கோப்புகளை அவர்கள் திருத்துவதற்கு இந்த மென்பொருள் அனுமதிக்காது.
இதனால் உங்கள் பென்டிரைவ் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து அனுப்பலாம் மற்றும் வைரசினால் இந்த பென்டிரைவ்களை கண்டறிய முடியவில்லை.
2. USB FIREWALL: பென்டிரைவ் உபயோகிக்கும் பெரும்பாலானோர் உபயோகிக்கும் மென்பொருள். இது USBயில் இருந்து கணணிக்கு வைரஸ் பரவாமல் இருக்க பயன்படுகிறது. இதை DOWNLOAD செய்து இயக்கியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணணியின் பின்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்.
ஏதேனும் வைரஸ் உங்கள் கணணியில் ஊடுருவ முயற்சிக்கும் போது இந்த மென்பொருள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது.
3. PANDA USB VACCINATION TOOL: பாண்டா நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை நம் கணணியில் நிறுவினால் பென்டிரைவில் உள்ள autorun.inf கோப்பை முற்றிலுமாக தடைசெய்கிறது.
உங்கள் பென்டிரைவில் தானே இயங்கும் வசதி தடுக்கப்படுவதால் வைரஸ் பரவும் வாய்ப்பு முற்றிலுமாக குறைகிறது. இந்த மென்பொருளுக்கு நமக்கு தேவையான சார்ட்கட் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.
4. USB GUARDIAN: இந்த மென்பொருள் உபயோகிக்க மிகவும் சுலபமானது. இதன் மூலம் பாதுகாப்பாக நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொள்ள முடியும். வைரஸ் பாதிக்கும் என்ற கவலையே வேண்டாம். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்பை நாம் lock செய்தும் வைத்து கொள்ளலாம்.
தரவிறக்க சுட்டி

Sunday, April 10, 2011

கணணியை முழுவதுமாக ஸ்கேன் செய்து வன்தட்டில் உள்ள காலியிடங்களை பார்க்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா?

நமது கணணியில் உள்ள டிரைவ் எதுவாக இருந்தாலும் சரி அது எந்த அளவு உபயோகிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு கோப்புகளின் அளவு என்ன என தெளிவாக அறிய இந்த மென்பொருளால் முடியும்.
மேலும் இதிலிருந்தே ரீ-சைக்கிள் பின்னை சுத்தம் செய்யலாம். Control Panelல் உள்ள Add Removeல் உள்ள கோப்புகளை நீக்கலாம். வன்தட்டை ஸ்கேன் செய்து காலியிடங்களை பார்க்கலாம்.
இந்த மென்பொருளை தரவிறக்கியதுடன் தோன்றும் விண்டோவில் Download Scanner கிளிக் செய்யவும். அதில் உங்கள் வன்தட்டின் மொத்த விவரம் தெரிய வரும். அந்த விண்டோவில் தோன்றும் எதாவது ஒரு நிறத்தின் மீது கர்சரை வைத்தால் அந்த டிரைவின் பெயர், அதில் உள்ள கோப்பறை, அதில் உள்ள கோப்புகளின் அளவு விவரம் மேல் புறத்தில் தெரிய வரும்.
இதைப் போலவே நீங்கள் உங்கள் வசம் உள்ள அனைத்து டிரைவ்களின் விவரத்தை நொடியில் அறிந்து கொள்ளலாம். வலப்புறம் மேலே உள்ள கட்டத்தை கிளிக் செய்வது மூலம் நேரடியாக Add/Remove Programs சென்று அதில் உள்ளவைகளை நீக்கி பின் ஸ்கேன் டிக்ஸ் செய்து காலியிடங்களை பார்வையிடலாம்.
அதிலேயே கீழே உள்ள ரீ-சைக்கிள் பின் கிளிக் செய்து அதில் உள்ள குப்பைகளை நீக்கலாம்.
தரவிறக்க சுட்டி

Thursday, April 7, 2011

உங்கள் கோப்புறைகளுக்கு (Folder) ஒன்றை கடவுச்சொல்(password) கொடுத்து மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

உங்கள் அலுவலகக் கணனியில் உங்களுக்கென பயனர் கணக்குடன்(user Account) கடவுச்சொல் உள்ளதாக இருந்தால், அதன் File System என்.டி.எப்.எஸ்(NTFS) ஆக இருக்கும்.
2. இனி எந்த கோப்புறைக்கு கடவுச்சொல் கொடுக்க வேண்டுமோ, அதன் மீது Right Click செய்திடவும். பின் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது Alt அழுத்தியவாறே Double Click செய்திடவும்.
3. கிடைக்கும் விண்டோவில் Sharing என்று உள்ள Tab ஐத் தேர்ந்தெடுக்கவும். அதில் Make this Folder Private என்று உள்ளதை தேர்ந்தெடுக்கவும்.
4. பின் Apply என்பதில் சொடுக்கவும். உங்களுடைய கணக்குக்கு கடவுச்சொல் இல்லை என்றால், ஒரு சிறிய பெட்டிச் செய்தி வரும். கடவுச்சொல் ஒன்றை தரப்போகிறீர்களா? என்று கேட்கப்படும். உங்கள் கோப்புறையை நீங்கள் Private ஆக மாற்ற வேண்டும் என்றால் இந்த கடவுச்சொல்லினைக் கட்டாயம் கொடுத்தே ஆகவேண்டும். இவ்வாறு கொடுத்துவிட்டால் பின் கணனியில் உங்கள் கணக்கில் நுழைகையிலும் அதே கடவுச்சொல்லினை கொடுக்க வேண்டியதிருக்கும்.
5. கடவுச்சொல் ஒன்றைக் கொடுத்துப் பின் அதனை உறுதிப்படுத்தவும். பின் Create Password என்பதை அழுத்தி கடவுச்சொல் விண்டோவினை மூடவும்.
6. பின் Properties எனும் Dialog Box இல் OK என அழுத்தவும். இனி உங்கள் கடவுச்சொல் இல்லாமல் இந்த கோப்புறையை யாரும் திறக்க முடியாது.

Sunday, April 3, 2011

உங்களது ஆங்கில சொல்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா?

ஆங்கில சொல்வளத்தை மேம்படுத்த விரும்பும் அனைவரும் தங்களின் ஆங்கில vocabulary அறிவை வேடிக்கையாக அதிகரிக்க நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் நிகழ்ச்சிகளை வைத்து ஆங்கில சொல்வளத்தை கூறினால் நாம் எளிதாக புரிந்து கொள்வோம் என்பதை உணர்ந்து ஆங்கில சொல்வளத்தை அதிகரிப்பதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்றவுடன் இருக்கும் கட்டத்திற்குள் நாம் விரும்பிய வார்த்தையை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கி நம் ஆங்கில சொல்வளத்தை மேம்படுத்தலாம்.
தற்போது தேடிய வார்த்தைகள் List வாரியாக நமக்கு பட்டியலிட்டு காட்டப்படும். நாம் கொடுத்த வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை அங்கு இருக்கும் Speaker Icon ஐ சொடுக்கி கேட்கலாம்.
மேலும் நாம் கொடுத்த வார்த்தைகான synonyms ம் நமக்கு காட்டப்படும். இதைத் தவிர 100 க்கும் மேற்பட்ட SAT Words List ஆக கொடுக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி

Friday, April 1, 2011

All island sports 2009

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டியின் போது