Tuesday, March 29, 2011

உங்களது பேஸ்புக்கில் வீடியோவைக் கொண்டு வர

 பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும்.
இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும், நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம்.
இதன் மூலம் நம் வேலைகளை எல்லாம் மறந்து நண்பர்களோடு அரட்டையில் மகிழ்கிறோம். இப்பொழுது மேலும் ஒரு படி மேலே சென்று நம் நண்பர்களின் முகத்தை பார்த்து கொண்டே எப்படி அரட்டை அடித்தால் எப்படி இருக்கும்.
1. அதற்கு முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
2. அடுத்து இந்த லிங்கில் FACING CALL செல்லுங்கள்.
3. வரும் பக்கத்தில் உள்ள Go to App என்ற பட்டனை அழுத்தவும்.
4. அடுத்து உங்களுக்கு வேறு ஒரு பக்கம் ஓபன் ஆகும். அதில் உள்ள Allow என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
5. அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும்.
6. அதன் பின் ஓபன் ஆகும் விண்டோவில் உள்ள Allow என்ற பட்டனை அழுத்திவிடவும்.
7. அவ்வளவு தான் உங்கள் கணக்கில் வீடியோ சாட்டிங் ஆக்டிவேட் செய்யப்பட்டு விட்டது.
8. இவ்வசதியை பயன்படுத்த உங்கள் கணணியில் வெப் கேமரா அல்லது மைக்ரோபோன் வசதி இருக்க வேண்டும்.
9. இதில் உள்ள invite friends என்ற வசதி மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களை இணைத்து அவர்களோடு வீடியோ சேட்டிங்கில் பேசி மகிழலாம்.

இலங்கையின் கிரிக்கட் மைதானங்களிலிருந்து முரளிதரன் விடைபெற்றார்


இலங்கையின் கிரிக்கட் மைதானங்களிலிருந்து இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முரளிதரன் இன்று விடைபெற்றுக் கொண்டார்.
உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியுடன் கிரிக்கட்டிலிருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளதாக முன்னதாகவே முரளிதரன் அறிவித்திருந்தார். அதன் காரணமாக இன்று அவர் விளையாடிய போட்டியே இலங்கை மண்ணில் அவர் விளையாடும் கடைசிப் போட்டியாகும்.
இன்றைய நியூசிலாந்துடனான போட்டியில் ஸ்டைரிஸின் விக்கட்டைக் கைப்பற்றியது அவர் இலங்கை மண்ணில் கடைசியாகக் கைப்பற்றியாக விக்கட்டாக பதிவாகியுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி மும்பையில் நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கட்டின் கடைசிப் போட்டிகளுடன் சர்வதேச கிரிக்கட் அரங்கிலிருந்தும் முரளிதரன் முழுமையாக ஓய்வுபெற்று விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது

பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை இறுதிப் போட்டிக்கு தகுதி


இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பரபரப்பான அரையிறுதி போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
கொழும்பு பிரேமதாஸ மைதானத்தில் பகல்இரவு ஆட்டமாக நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் குப்டில் 39 ஓட்டங்களையும், டெய்லர் 36 ஓட்டங்களையும், ஸ்டைரிஸ் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க, மெண்டிஸ் தலா 3 விக்கெட்டுகளையும், முரளிதரன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

218 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.5 ஓவர்களில் 05 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய தரங்க 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மறுமுனையில் இருந்த டில்சான் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 73 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய சங்கக்கார 54 ஓட்டங்களையும், ஜயவர்தன ஒரு ஓட்டத்துடனும், சாமர சில்வா 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

ஒரு கட்டத்தில் 32.4 ஓவர்களுக்கு 160 ஓட்டங்களை பெற்று 2 விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை 169 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து போட்டியின் நிலையை மாற்றியது.

எனினும் தொடர்ந்து களமிறங்கிய மெத்தியூசின் சிறப்பான துடுப்பாட்டத்தால் இலங்கை அணி 47.5 ஓவர்களில் 220 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. களத்தில் மெத்தியூஸ் 14 ஓட்டங்களையும் சரவீர 23 ஓட்டங்களையும் பெற்று அணியை வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றனர்.

Monday, March 28, 2011

Jokes

1) வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்.....
"ஹலோ வணக்கம்!"
"வணக்கம்! சொல்லுங்க..."
"வணக்கம்தான் சொல்லிட்டேனே எத்தனை தடவை சொல்றது?"
"அதில்லைங்க"
"எது இல்லை?"
"சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?"
"போன்ல இருந்துதான் பேசறேன்"
"சரி என்ன பாட்டு வேணும்?"
"சினிமா பாட்டுதான்"
"சரி எந்த படத்துல இருந்து?"
"சினிமா படத்துல இருந்துதான்"
"அய்யோ!"
என்று தலையில் அடித்துக்கொண்ட அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்
அன்றோடு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.



2) வயதான பெண்மணி மருத்துவரிடம்:  “டாக்டர், வலது கால் எப்போதும் வலிக்கிறது.

   டாக்டர்:   “வயதாகிவிட்டால் அப்படித்தான் இருக்கும்!

   வயதான பெண்மணி (மீண்டும்) மருத்துவரிடம்: இடது காலுக்கும் அதே வயதுதானே ஆகிறது டாக்டர்!